Wednesday, September 9, 2009

அவள்

அவளை பார்த்ததும்
அவள் அழகில் மெய் மறந்தேன்..
அவளோ கை நீட்டி விருப்பம் தெரிவித்தாள்..
வீட்டிற்கு அழைத்து வந்தேன்..

வீட்டிற்கு வெளியே உட்கார வைத்து
தண்ணீர் கொடுத்தேன்..
புதிய இடம் பிடித்தவளாய் முகம்
மலர்ந்தாள்..

காலையில் சூரியன் துயில்
எழும் முன் பனித்துளியில் குளித்து
காலை வணக்கம் சொன்னாள்..

சூரியன் புகைப்படம் எடுப்பது போல்
எப்பொழுதும் அவனை பார்த்தால்
குதூகலித்து சிரிப்பாள்..

உணவு இன்றி தனியே விட்டு சென்றால்
தலை குனிந்து வருத்தம் தெரிவிப்பாள்..

நான் சோர்ந்த நாட்களில்
அவள் அழகால் என்னை
புத்துணர்வு அடைய செய்வாள்..

அன்று வெளியே கிளம்பியதும்
ஏகமாய் பார்த்தாள்..
அவளையும் அழைத்து கொண்டேன்
வண்டியின் குளிரிலும் ஒய்யாரமாய் வந்தாள்..

அவள் உணர்வுகள் புரிந்து இருந்தும்
வண்டியில் இடம் இல்லாததால்
உறவினர் வீட்டில் விடு வந்தேன்..

வண்டியில் ஏறும் வரை
தலை நீட்டி பார்த்தாள்..

இன்றும் உன் இடத்தை
யாரும் ஈடு செய்ய முடியவில்லை..

விரைவில் வருகிறேன் உன்னை மீட்க
வருகிறேன் என் பாசமுள்ள
சூரியகாந்தி செடியே..

Tuesday, June 30, 2009

கூண்டு கிளி

நீ இன்பமாய்  இருப்பதாய் எண்ணி

உன்னை  வர்ணித்து  கவிதைகள் தொடுத்து  இருக்கிறேன்

உன்னை கண் இமைக்காமல் ரசித்திருக்கிறேன்

இன்று நான் தங்க கூட்டில் அடைபட்ட போது புரிகிறது 

உன் வேதனைகளும் , வலிகளும் ...